மன்னாரில் மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுவதாக முறைப்பாடு
மன்னாரிலுள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் மன்னார் நகரசபையிடம், பாதிக்கப்பட்ட நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதியில் 06 இறைச்சி விற்பனை நிலையங்கள் உள்ளன.
மன்னார் நகரசபையினால் வழங்கப்பட்ட விலைப்பட்டியலில் ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 400 ரூபாவெனவும் ஒரு கிலோ முள்ளுடன் கூடிய மாட்டிறைச்சி 360 ரூபாவெனவும் ஒரு கிலோ ஈரல் 600 ரூபாவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கடை உரிமையாளர்கள் இவ்விலைப்பட்டியலை மறைத்துவைத்துவிட்டு ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ முள்ளுடன் மாட்டிறைச்சி 450 ரூபாவுக்கும்; ஒரு கிலோ ஈரல் 700 ரூபாவுக்குமாக விலையை கூட்டி விற்பனை செய்வதாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தை தொடர்புகொண்டு கேட்டபோது,
மன்னார் நகரசபைக்குட்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் தொடர்பில் மன்னார் நகரசபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மன்னார் நகரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்வது எங்களுக்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

Reviewed by NEWMANNAR
on
September 12, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment