அனுமதியின்றி அமைக்கப்பட்ட சொரூபத்தை அகற்ற உத்தரவு.

மன்னார் உப்பள நிர்வாகத்தினால் தமக்கு சொந்தமான காணியில் தமது அனுமதியின்றி மதச்சொரூபம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.
இதையடுத்து மன்னார் பொலிஸார் குறித்த முறைப்பாட்டையடுத்து மன்னார் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
-இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி குறித்த வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் இவ் வழக்கை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் அரச காணியில் அணுமதியின்றி அமைக்கப்பட்ட குறித்த சொரூபத்தை அகற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அனுமதியின்றி அமைக்கப்பட்ட சொரூபத்தை அகற்ற உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
September 14, 2012
Rating:

No comments:
Post a Comment