மன்னார் முசலி பிரதேசசெயலார் பிரிவில் வரட்சி ,மக்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசசெயலார் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடும் வரட்சிகாரணமாக 550 ஏக்கர் விவசாய செய்கை பாதிப்படைந்துள்ளதுடன் 7500 உட்பட்டமக்கள் குடிநிர் இன்றியும்அவதிபடுகின்றனர்.
அதில் பாண்டாவெளி .பூனைச்சிக்குளம். வெளிமல ஆகியகிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் காடந்த 4 வருடகாலமாக மீள்குடியேறிய நிலையில் குடிநீர் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர் இல்லாத பிரச்சினையினை முசலி பிரதேச சபை மற்றும் பிரதேசசெயலாளர் பிரிவோ கவனம் செலுத்தவில்லை. ஜனாதிபதி .வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கும் உதவிகளை கூட முசலிபிரதேசமக்கள் இன்னும் பெற்றுகொள்ளாமல் இருகின்றனர்.
முசலி பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாய செய்கை முற்றாக பாதிப்படைந்ததுடன் குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அதநேரம் விவசாய பயிர் செய்கைக்கு நிர்மாணிக்கப்பட்ட கிணறுகளையும் குடிநிர் வசதிகளையும் செய்து தருமாறு முசலி பிரதேசமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
மன்னார் முசலி பிரதேசசெயலார் பிரிவில் வரட்சி ,மக்கள் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
September 14, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment