அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாதுகாப்பற்ற முறையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் வண்டிகள்.

மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்களினால் மன்னார் பஸார் பகுதியில் அகழப்படுகின்ற கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்துடன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுகின்றது. இதனால் அப்பகுதியால் வரும் மக்களும்,வர்த்தகர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


 உணவகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற கழிவுப் பொருட்கள் காலை நேரங்களில் குறித்த கழிவு அகற்றும் இயந்திரங்களில் அதிகளவில் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. குறித்த கழிவுப்பொருட்களுடன் குறித்த வாகனம் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன் நிறுத்தி வைக்கப்படுகின்றது.

 இதனால் காகம் மற்றும் நாய் குறித்த கழிவுகளை உண்டு வீதியால் பயணிப்பவர்களுக்கு இடையூறு வழங்குகின்றது. அது மட்டுமின்றி குறித்த கழிவுப்பொருட்களில் பாரிய துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -எனவே கழிவு அகற்றும் வண்டி முழமையாக திறந்த நிலையில் காணப்படுகின்றது. அதனை பாதுகாப்பான முறையில் சுற்றி அடைத்து தமது சேவையினை மேற்கொண்டால் எவ்வித அசௌகரியங்களும் இன்றி சேவையினை மேற்கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.


 மன்னார் நகர  நிருபர்

மன்னாரில் பாதுகாப்பற்ற முறையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் வண்டிகள். Reviewed by NEWMANNAR on September 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.