அண்மைய செய்திகள்

recent
-

ததமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் 1008 தேங்காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை


சர்வதேச கைதிகள் தினமான செப்ரம்பர் 12ஆம் திகதியன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், காணாமல் போனவர்களை பத்திரமாக மீட்டுத்தரும்படியும் வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள காளிகோயிலில் காலை பத்துமணிக்கு 1008 சிதறு தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிராத்தனை செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.



இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்.க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமலிருப்பது எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அவர்களின் விடுதலை தொடர்பாக நாம் மேற்கொண்ட பல முயற்சிகளும் பலனற்றுப் போயுள்ளன. 

அத்துடன் மட்டுமன்றி, சிறைக்கூடங்கள்கூட தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பான இடமாகத் தோன்றவில்லை. சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகியோர் மரணமடைந்த நிலையில் சதீஸ்குமார் நினைவிழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் உயிரையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளோர், சமூக சேவகர்கள், சமுதாய நலனில் அக்கறை உள்ளோர் ஆகிய அனைவரதும் கடமையாகும்.

ஆகவே, சிறைகளிலும் வதைமுகாம்களிலும் பிற இடங்களிலும் வாடுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில், சர்வதேச கைதிகள் தினத்தன்று வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள காளி கோயிலில் 1008 தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிராத்தனையை மேற்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் அதே நேரத்தில் காணாமல் போகச்செய்யப்பட்டோருக்காகவும் விசேட பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறைகொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி உள்ளிட்ட தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் கலந்துகொள்ள உள்ளனர். சிறைக்கூடங்களிலும், தடுப்பு முகாம்களிலும், இன்னபிற இடங்களிலும் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

சர்வதேச கைதிகள் தினமான 12.09.2012 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா, குருமன்காடு காளிகோயில் முன்றலில் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

இந்த அறிக்கையை ஒவ்வொருவரும் எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்று எமது உறவுகளின் சோகத்திலும் அன்பிற்கான ஏக்கத்திலும் பாசமிக்கவர்களைப் பிரிந்துள்ளதனால் ஏற்படும் மன அழுத்தத்திலும் நாமும் பங்கெடுக்கின்றோம் என்பதை உறுதி செய்யும் வகையிலும் அவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர் என்பதை உணர்த்தும் வகையிலும் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                               மன்னார் நிருபர் 

ததமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் 1008 தேங்காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை Reviewed by NEWMANNAR on September 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.