மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ் காண்ஸ்டபில்,நகர சபை உறுப்பினர் ஆகியோர் விளக்கமறியலில்.
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டப்பில் மற்றும் மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் ஆகிய இருவரையும் இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம் பெற்ற போது குறித்த இருவர் உற்பட 41 பேர் மன்றில் ஆஜர் படுத்தியிருந்த போது குறித்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க குறித்த சந்தேக நபர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
-இதனைத் தொடர்ந்து ஏனைய வழக்கு விசாரணைகள் மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நீதி மன்றம் மீது ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்ட போது சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்து செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளாகள் 4 பேருக்கு தொடர்ந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் போது ஒரு ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் பொலிஸ் கான்ஸ்டபில் சிறி காந்தன் மற்றும் மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் என்.நகுசின் ஆகியோரும் அடங்குவதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற போது ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபில் சிறி காந்தன் மற்றும் மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் என்.நகுசின் ஆகியோறை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு வந்த ஊடகவியலாளர்களில் ஏ.எஸ்.எம்.பஸ்மி,எஸ்.ஆர்.லெம்பே ட், மார்க் ஆனந்த், என்.ஜெ.பெலிஸ்ரஸ் பச்சக் ஆகயோருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ் காண்ஸ்டபில்,நகர சபை உறுப்பினர் ஆகியோர் விளக்கமறியலில்.
Reviewed by NEWMANNAR
on
September 10, 2012
Rating:

No comments:
Post a Comment