அமைச்சர் றிஸாட் பதீயூதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.
கைத்தொழில் மற்றும் வாணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதீயூதினை இம்மாதம் 24 ஆம் திகதி(24-09-2012) மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
அமைச்சர் றிஸாட் பதீயூதின் மன்னார் நீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.
-இந்த நிலையில் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அமைச்சரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி(04-10-2012) மீண்டும் மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதீயூதின் தொடர்பான பி 408-12 எனும் இலக்க வழக்கு நேற்று திங்கட்கிழமை விசேட நகர்தல் பத்திரம் மூலம் மன்னார் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ இன்று மன்னார் நீதிமன்றில் விசேட நகர்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்து குறித்த வழக்கை அழைக்குமாறு நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.
இந்த நிலையில குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட சமயம் குறித்த வழக்கில் பாதீக்கப்பட்ட தரப்பில் நேற்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மகேந்திரா குமார சில்வா அமைச்சர் றிஸாட் பதீயூதின் தொடர்பாக இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அறிக்கை இது வரை மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும்,குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பான அறிக்கையும் மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.
-மேலும் இவ்விதம் அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அமைச்சர் றிஸாட் பதீயூதீன் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி அழைக்கப்படவிருந்த வழக்கினை இம்மாதம் 24 ஆம் திகதி முன்கூட்டியே அழைக்குமாறு கோரிக்கையினை அவர் முன்வைத்தார்.
-குறித்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க அமைச்சரைஇம்மாதம் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் இது தொடர்பில் அமைச்சருக்கு பதிவுத்தபால் மூலம் அறிவித்தல் வழங்குமாறும் நேற்று திங்கட்கிழமை மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
(மன்னார் நிருபர்)
அமைச்சர் றிஸாட் பதீயூதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
September 11, 2012
Rating:

No comments:
Post a Comment