மன்னாரில் வீதித்தடைகள் இன்றி காணப்படும் வீதிகள்.
மன்னார் மாட்டத்தில் சகல வீதிகளும்,கிராமங்களில் உள்ள வீதிகளும் கொங்கீரிட் வீதியாக மற்றப்பட்டுள்ள போதும் பல முக்கிய வீதிகளுக்கான வீதித்தடைகள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீதிகள் கொங்கீரீட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் அதி கூடிய வேகத்தில் செல்லுகின்றது.
ஆனால் பல கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளுக்கான வீதித்தடைகள் எவையும் அமைக்கப்படவில்லை.
இதனால் விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
சிறுவர்களின் நடமாட்டங்கள் அதிகம் உள்ளமையினால் பாதிப்புக்களை உடன் குறைக்கும் வண்ணம் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வீதித்தடைகள் அமைக்கப்படாத வீதிகளுக்கு உடனடியாக வீதித்தடைகளை அமைக்குமாறு மக்கள் வேண்டு கோள் விடுக்கின்றனர்.
(மன்னார் நிருபர்)
மன்னாரில் வீதித்தடைகள் இன்றி காணப்படும் வீதிகள்.
Reviewed by NEWMANNAR
on
September 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment