அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தெரு மின் விளக்குகளின் அவலநிலை

மன்னார் மாவட்டத்தில் உள்ள தெரு மின்விளக்குகள் பல தொடர்ந்தும் ஒளிராத நிலையில் காணப்பட்டு வருவதாகவும் இதனால் மக்கள் இரவு நேரங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நகரப்பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் காணப்படுகின்றது.
அவற்றில் பல தெரு விளக்குகள் ஒளிராத நிலையில் காணப்படுகின்றது.


ஆனால் மன்னாரின்; பல இடங்களிலும் தெரு மின் விளக்குகள் உள்ள போதும் பல கிராமங்களுக்குள் செல்லும் வீதிகளில் உள்ள தெரு மின் விளக்குகள் ஒளிர்வதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் தொடர்பாக பாவனையாளர்களினால் மன்னார் மின்சாரசபையிடம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

-இதே வேளை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பல பகுதிகளில் ஒளிராத நிலையில் காணப்படுகின்ற தெரு மின் விளக்குகளை திருத்தி புதிய மின் குமிழ்களை பொருத்தும் வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பல மின் குமிழ்கள் ஒளிர்வதில்லை என மன்னார் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற தெரு மின் விளக்குகள் பல பழுதடைந்த நிலையில் அவற்றை மாற்றி மீண்டும் ஓளிர வைக்கும் நோக்கில் மன்னார் நகர சபை முதற்கட்டமாக 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் 200 தெரு மின் குமிழ்களும் அதற்காண ஏனைய உபகரணங்களும் கொள்வனவு செய்து மன்னார் மின்சார சபையின் உதவியுடன் அவற்றை பொறுத்தினர்.

ஆனால் அவற்றில் பல தற்போது ஒளிர்வதில்லை எனவும் இதனால் இரவு நேரங்களில் மக்களும் குறிப்பாக பெண்களும் வீதியால் செல்ல அச்சம் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் தெரு மின் விளக்குகளின் அவலநிலை Reviewed by NEWMANNAR on September 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.