மன்னாரில் நாளை (07.10.2012) 'வலியின் விம்பங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா
'கலையருவி' எனப்படும் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் வெளியீடாக 'மன்னார் பெனில்' என்பவரின் 'வலியின் விம்பங்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.10.2012) காலை 10.00 மணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலையருவி அமைப்பின் இயக்குனரும் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் கலந்துகொள்கிறார். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்திரு. இ. செபமாலை அவர்கள் இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துகின்றார். பல்துறை வித்தகர் ஆசிரியர் ஏ. நிஷாந்தன் அவர்கள் வெளியீட்டுரையை வழங்குகின்றார். நூல் மதிப்பீட்டுரையை சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி அவர்கள் வழங்குகின்றார்.
இக்கவிதை நூலின் ஆசிரியர் பெனில் அவர்கள் தற்போது மன்னார் தோட்டவெளியில் வசிக்கின்றார். 10 வருடங்களுக்கு முன்னார் மரத்தில் இருந்து தவறி விழுந்ததால் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்சுப் பகுதிக்குக் கீழே உணர்விழந்தவராக சிகிச்சைகள் பலனின்றி சக்கர நாற்காலியில்; வாழ்ந்துவருகின்றார். சூரியன் எவ். எம். வானொலியின் ரீங்காரம் என்ற நிகழ்ச்சியில் கவிதைகளை வாசித்து வருகின்றார். அத்துடன் 'சிறகுடைந்த இளஞ்சிட்டு' என்ற பெயரில் மன்னா கத்தோலிக்க பத்திரிகையிலும், 'மன்னார் பெனில்' என்ற பெயரில் வீரகேசரி, மித்திரன், போன்ற பத்திரிகைகளிலும் கவிதைகளை எழுதிவருகின்றார்.
மன்னாரில் நாளை (07.10.2012) 'வலியின் விம்பங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

No comments:
Post a Comment