மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு வயோதிபரின் தங்க மோதிரம் திருட்டு-மன்னார் நகரில் துணிகரச் சம்பவம்.
மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானச்சாலையில் மது வேண்டி அருந்திய வயோதிபர் ஒருவருக்கு குறித்த மதுசாரத்தில் மயக்கமருந்து கலந்து கொடுக்கப்பட்டு அவருடைய பெறுமதி வாய்ந்த தங்க மோதிரங்கள் அபகரிக்கப்பட்ட துணிகரச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை மதியம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மன்னார் எழுத்தூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் தெரிவிக்கையில்
கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக மன்னார் தினச்சந்தை வியாபார நிலையப்பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்தேன்.
இதன் போது நான் 2 பவுண் தங்க மோதிரங்கள் இரண்டை நான் அணிந்திருந்தேன்.
இதன் போது நான் மதுபானத்தை வேண்ட குறித்த மது விற்பனை நிலையத்தினுள் சென்ற போது அப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் வந்து இரண்டு பேரும் சேர்ந்து மதுபானத்தை வேண்டி பிரித்து எடுப்போம் என கூறியுள்ளார்.
இதற்கு நானும் ஒத்துக்கொள்ள மதுபானத்தை வேண்டி இரண்டாக பிரித்துள்ளனர்.
இதன் போது நான் மது விற்பனை நிலையத்திற்கு முன் நான் பயணித்து வந்த துவிச்சக்கர வண்டி பூட்டாமல் நின்றமையினால் அதனை பார்க்கச் சென்ற போது எனது மது பானப்போத்தலினுள் மயக்க மருந்து கலக்கப்பட்டு விட்டது.
பின் எனது பங்கை நான் வேண்டிய போது அதன் நிறம் வித்தியாசமாக காணப்பட்டது.இது தொடர்பில் அவர்களிடம் கேட்ட போது வேறு காரணத்தை கூறினார்கள்.
-இந்த நிலையில் மது விற்பனை நிலையத்திற்கு சற்று அருகாமையில் வைத்து கொஞ்சம் மது அருந்தினேன்.
-பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
என்னை சந்தை கட்டிடத்தொகுதிக்குள் கொண்டு சென்று எனது 2 மோதிரங்களையும் களவாடிச் சென்றுள்ளனர்.
குறித்த 2 மோதிரங்களும் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெருமதி வாய்தவை.
இந்த நிலையில் நான் குறித்த சந்தை கட்டிடத்தில் சுய நினைவின்றி கிடந்ததை கண்டவர்கள் எனது போக்கட்டினுள் இருந்த தொலை பேசி இலக்கத்திணுடாக தொடர்பு கொண்டு எனது குடும்பத்தாருக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் என்னை வீ;டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
எனக்கு சுய நினைவு மறு நாள் வெள்ளிக்கிழமை மாலையே திரும்பியது.
பின்பு தான் உண்மை விபரம் தெரிய வந்ததாக குறித்த வயோதிபர் தெரிவித்தார்.
மன்னார் நகர நிருபர்,
மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு வயோதிபரின் தங்க மோதிரம் திருட்டு-மன்னார் நகரில் துணிகரச் சம்பவம்.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

No comments:
Post a Comment