மன்னார் நீதிமன்ற தாக்குதல் சந்தேக நபர்கள் 16 பேருக்கு பிணை
இந்த 16 சந்தேக நபர்களும் தலா 10,000 ரூபா ரொக்க பிணையிலும் தலா 500,000 ரூபா சரீர பிணையிலுமே மன்னார் மேலதிக நீதவானால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த ஜூலை 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 43 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவரில் ஆறு பேர் மன்னார் மேல் நீதிமன்றத்தின் உத்திரவிற்கமைய மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸினால் ஒக்டோபர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்னர்.
இதேவேளை, நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 21 சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்ற தாக்குதல் சந்தேக நபர்கள் 16 பேருக்கு பிணை
Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:

No comments:
Post a Comment