மன்னாரில் திண்மக்கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை!
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் மன்னார் நகர சபைக்கு சுகாதார முறையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி திண்மக்கழிவுகள் சேகரிக்கும் பிளாஸ்ரிக் பெரல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் திருமதி மங்கிளிக்கா அவர்களினால் அனுப்பி வைப்பட்பட்ட 125 பிளாஸ்ரிக் பெரல்கள் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
-மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் வேண்டுகோளிற்க்கு அமைவாக மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் இவ்விடையம் தொடர்பில் கதைத்தோம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சுகாதார முறையில் அமைக்கப்பட்டுள்ள தின்மக்கழிவு சேகரிக்கும் பிளாஸ்ரிக் பெரல்கள் 125 மன்னார் நகர சபை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்றின் விலை சுமார் 1200 ரூபாய் பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகின்றது.
குறித்த தின்மக்களிவு அகற்றும் குறித்த பிளாஸ்ரிக் பெரல்கள் பாடசாலைகள் வைத்தியசாலை ஆலயங்கள் பொது இடங்கள் கடைத்தெருக்கள் போன்ற இடங்களில் வைக்கப்படவுள்ளது. மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வழங்கப்பட்ட குறித்த தின்மக்கழிவு அகற்றும் பெரல்கள் அவரின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் குறித்த இடங்களில் வைக்கப்படவுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment