மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் தேங்கும் கழிவு நீரினால் பயணிகள் அசௌகரியம்
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட பகுதியில் தேங்குவதினால் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிற்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸை தொடர்புக்கொண்டு கேட்டபோது, 'மன்னார் அரச பேரூந்து தரிப்பிடப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக் நிலையம் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின் கழிவு நீர் பின்பகுதியில் அமைந்துள்ள எமது தனியார் பேரூந்து தரிப்பிடப்பகுதியில் தேங்குகின்றது.
இது தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு பல தடவை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அதற்கு அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதினால் தேங்குகின்ற மழை நீருடன் குறித்த கழவு நீரும் கலக்கின்றது. இதனால் பாரிய துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் எமது சங்கத்தின் சார்பாக நாங்கள் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். இந்நிலையில், மன்னார் நகர சபை குறித்த கழிவு நீரை வாய்க்காலுடன் இணைப்பதற்காண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது' என தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment