குவைத் நிதியுதவியில் மன்னார் மாவட்டத்தில் 50 வீடுகள் நிர்மாணம்

இந்நிகழ்வில் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அடிக்கல்லை நாட்டினார்.
முசலி பிரதேச சபை தலைவர் டபிள்யூ.எம்.எஹியன் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவு செயலாளர் மௌலவி எம்.அப்துர் ரஹ்மான உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேற ஆரம்பித்துள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காகவே இந்த வீட்டு திட்டம் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதேவேளை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி குவைத் நாட்டின் நிவாரண குழுவுடன் இணைந்து நானாட்டான், நொச்சிகுளம் பிரதேசத்தில் ஏற்கனவே 42 வீடுகளை கட்டி பொதுமக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைத் நிதியுதவியில் மன்னார் மாவட்டத்தில் 50 வீடுகள் நிர்மாணம்
Reviewed by NEWMANNAR
on
October 02, 2012
Rating:

No comments:
Post a Comment