(2ம் இணைப்பு )முச்சக்கர வண்டி விபத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் புதல்வர் பலி.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் மன்னார் உதவி அரசாங்க அதிபரான திருமதி ஸ்ரன்லி டிமேல் அவர்களின் புதல்வரான ஸ்ரான்லி வொட்ஷன் லெம்பேட் (வயது-20) என்பவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,குறித்த மூன்று இளைஞர்களும் இன்று சனிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னாரில் இருந்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் குறித்த 3 இளைஞர்களும் மன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது பேசாலை நடுக்குடா வீதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் குறித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த 3 இளைஞர்களும் சில மணித்தியாலங்களில் பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் போது படு காயமடைந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் புதல்வரான வெக்ஸ்மன் லெம்பட் (வயது-20) என்பவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். ஏனைய இரண்டு இளைஞர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் மன்னார் உதவி அரசாங்க அதிபரின் மகனின் அகாலமரணம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
(நமது மன்னார் நகர நிருபர்)

Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

1 comment:
ஸ்ரான்லி. வொட்ஷன். லெம்பேட் தான் சரியான பெயர். பெயரை மாற்றி குழப்பத்தை நீக்கவும்...
Post a Comment