மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி மைக்கள் கொலின் திடீர் இடமாற்றம்.
மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரியாக கடமையாற்றி வந்த மைக்கள் கொலின் என்பவர் அரசியல் அழுத்தங்களின் காரணமாக திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடையம் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் பல வருடங்களுக்கு மேலாக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியாக செயற்பட்டு வந்த மைக்கள் கொலின் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,
குறித்த இடமாற்றம் உண்மை எனவும் இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலு க்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்காண கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தான் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறியே அரசியல் வாதி ஒருவரின் சதித்திட்டத்தின் கீழ் தனக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மைக்கள் கொலின் தெரிவித்தார்.
தற்பொது மன்னார் வைத்தியசாலையில் நீண்டகாலமாக இயங்காத நிலையில் காணப்பட்ட மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுவர் நன்னடத்தைப்பிரிவில் என்னை கடமைக்காக தற்போது அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்த மைக்கள் கொலின்,பொருத்தமற்ற காரணத்தை கூறி தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் நகர நிருபர்,
மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி மைக்கள் கொலின் திடீர் இடமாற்றம்.
Reviewed by NEWMANNAR
on
October 07, 2012
Rating:

No comments:
Post a Comment