நாளை (7.10.2012) முருங்கனில் கலைப்பணி நயப்பு மலர் வெளியீடு

முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்மலர் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7.10.2012) மாலை 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமை தாங்குகின்றார். இந்நிகழ்வில் மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்வில் நூல் மதிப்பீட்டுரையை யாழ் திருமறைக்கலாமன்ற பதில் இயக்குனர் திரு. ஜே. ஜே. ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் வழங்குகின்றார். இந்நிகழ்வின்போது கலைஞர்க குழந்தை அவர்களின் கலைப்பயணத்தில் இணைந்து பயணித்த கலைஞர்கள் சிலரும் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர். முருங்கனைச் சேர்ந்த நாடக நடிகள் திரு. செ. சீமான் அவர்கள் 'அரங்க வேந்தன்' என்ற பட்டத்தையும். முருங்கனைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் திரு. செ. இயேசுதாசன் அவர்கள் 'லய வேந்தன்' என்ற பட்டத்தையம், ஆவணத்தைச் சேர்ந்த திரு. செ. வேதநாயகம் அவர்கள் 'ஒப்பனைச் செம்மல்' என்ற பட்டத்தையும் பெறுகின்றனர். அமரர்களான முருங்கனைச் சேர்ந்த திரு. ப. அந்தோனிப்பிள்ளை, காத்தான்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் சீ. இம்மானுவேல் ஆகியோரும் கௌரவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். எம். சியான், அமதிகளின் யாழ் மாகாண முதல்வர் எம். போல் நட்சத்திரம் அடிகளார், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவத் துறைத் தலைவர் பேராசிரியர் ஞா. பிலேந்திரன் அடிகளார், பேராசிரியர் அகஸ்ரின் சூசை, நானாட்டான் பிரதேச செயலாளர் திரு. க.அ. சந்திரஐயா ஆகியோர் பங்கெடுக்கின்றனர். கௌரவ விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சிவசக்தி ஆனந்தன், கௌரவ வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் நானாட்டான் பிரதேசசபைத் தலைவர் திரு. ஏ. ரீ. அன்புராஜ் லெம்பேட் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இம்மலர் தொகுப்பு முயற்சியையையும், விழா ஏற்பாடுகளையும் அருட்திரு. அன்புராசா அடிகளார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
நாளை (7.10.2012) முருங்கனில் கலைப்பணி நயப்பு மலர் வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

No comments:
Post a Comment