மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் - 6 சந்தேக நபர்களுக்கு மன்னார் மேல் நீதிமன்றம் பிணை.
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆறு சந்தேக நபர்களை பிணையில் செல்லுவதற்கு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினார்.
கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் மன்னார் நீதிமன்றப்பகுதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பொலிஸார் அந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்ட போது அங்கு கலவரமாக மாறியது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரினால் மன்னார் நீதிமன்றம் மீது கற்களினால் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸாரும்,கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் இணைந்து 43 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 43 சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளவர்கள் சார்பில் மன்னார் மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி (04-10-2012) இந்த பிணை மனு மீதான விசாரனை மன்னார் மேல் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் குறித்த சந்தேக நபர்களில் ஆறு (6) பேருக்காண பிணை உத்தரவை விடுத்தார்.
இதையடுத்து 6 சந்தேக நபர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும்,5 இலட்சம் ரூபாய் பெருமதியான தலா 2 சரீரப்பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (12-10-2012) மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ பெல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த 6 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் - 6 சந்தேக நபர்களுக்கு மன்னார் மேல் நீதிமன்றம் பிணை.
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:

No comments:
Post a Comment