மன்னார் சாந்திபுரத்தில் அமைந்துள்ள சமயபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் காணி சிக்கலில்,தீர்த்து வைக்குமாறு மன்னார் சர்வமத பேரவையிடம் கோரிக்கை.பட இணைப்பு.
மன்னார் சாந்திபுரத்தில் அமைந்துள்ள சமயபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மக்களால் வழிபடப்பட்டு வரும் ஒர் ஆலயமாகும். இவ் ஆலயம் இந்துக்கலாச்சார தினைக்களத்தில் HA/05/MR/66 எனும் இலக்கத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தில் அறநெறிப்
பாடசாலையும் இயங்கிவருகின்றது.
எனினும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆலயம் அமைந்துள்ள காணி உள்ளடங்களாக அவ் நிலப்பரப்பை மன்னார் ஆயர் இல்லத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆலயத்தை வேறு இடத்திற்க்கு மாற்றுமாறும் தொடர்ந்து இவ் ஆலயத்தை புணரமைப்பு செய்யவேண்டாமெனவும் சம்பந்தப்பட்ட தரப்பால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனையை தீர்க்க கோரி ஆலய நிர்வாகத்தினரால் கடந்த 13.08.2012 ஆம் திகதி மன்னார் சர்வமத பேரவைக்கு கடிதம் சமர்பிக்கப்பட்டள்ளது. இதன் பிரதிகள் இந்துக்கலாச்சார தினைக்களத்திற்கும் ஏனைய பொது அமைப்புகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார் சர்வமத இனைத்தலைவர்களான சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள், அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார், அருட்தந்தை குனாளன், மௌவி ஆசீம் மற்றும் சில உறுப்பிணாகளும் ஆலய நிர்வாகத்தையும் ஆலயத்தை சார்ந்த மக்களையும் சந்தித்து கலந்தரையாடியதாகவும் ஆலய சூழலை பார்வையிட்டதாகவும் தெரியவருகின்றது.
இச்சந்திப்பில் ஆலயம் உள்ள காணியை வழங்குமாறும் அதற்கான பெறுமதியை தருவதாவும் அலயத்தை மாற்றுதல் விதிமுறைக்கு முரணானது எனவும் ஆலயத்தை சார்ந்தவர்கள் சர்வமத குழுவிடம் தெரிவித்ததாகவும். மேலும் இதற்கான உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கைவிடுத்ததாகவும் தெரியவருகின்றது.
இதற்கு சர்வமத குழுவினர் வெகுவிரைவில் ஆயர் இல்லத்தோடு சந்திப்பினை மேற்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் சாந்திபுரத்தில் அமைந்துள்ள சமயபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் காணி சிக்கலில்,தீர்த்து வைக்குமாறு மன்னார் சர்வமத பேரவையிடம் கோரிக்கை.பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:
No comments:
Post a Comment