மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டம் ஆரம்பம்.
டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டத்தின் 100 நாள் வேளைத்திட்டம் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் குறித்த டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது.
-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் நகர சபை வழாகத்தினுள் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபையின் செயலாளர் குரூஸ், மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குனசீலன்,மன்னார்,தலைமன்னா ர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்நூற்றுக்கணக்கா ன பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொலிஸார் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான விளிர்ப்புனர்வுகளை மக்களுக்கு வழங்குவதோடு அது தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் வழங்குவர்.
பின் வீடுகள் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டு டெங்கு நுளம்பு பெறுகுவதற்காண சூழ்நிலை குறித்த வீடுகளில் காணப்பட்டால் அபாயம் என சிகப்பு நிற ஸ்ரிக்கரும், டெங்கு நுளம்பு பெறுகுவதற்காண சூழ்நிலை காணப்படாத பட்சத்தில் டெங்கு நுளம்பு பெறுகுவதற்காண சூழ்நிலை இல்லை என்ற பச்சை நிற ஸ்ரிக்கரும் ஒட்டப்படும்.பின் அபாயம் என்ற சிகப்பு நிற ஸ்ரிக்கர் ஒட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டம் ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
October 15, 2012
Rating:
No comments:
Post a Comment