அண்மைய செய்திகள்

recent
-

20 வருங்களின் பின் தாயை கண்ட மகனும்,பிள்ளைகளால் முதியோர் இல்லங்களில் வாடும் பெற்றோர்களும் -முத்து விஜிதன்

அதிகமான தமிழ் இணையத்தளங்களின் இடப்பிடித்த மனதை வருடும் சம்பவம் கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முதியோருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி ..20 வருடங்களுக்கு பிறகு அவரது தாயை கட்டிதழுவிய ஒரு உணர்வு பூர்வமான சம்பவம்தான்.. எல்லாருடைய மனதையும் உருக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

இருந்தாலும் 20 வருடங்களாக பெற்ற தாய்  ஏங்கே இருக்கிறார் ? எப்படி இருக்கிறார் என்பது கூட அறியாமலே அல்லது தயை பற்றி தேடாமலே இருந்திருக்கிறார்! அப்படி இருந்ததற்கு  என்ன காரணமோ நான் அறியேன் .. இருந்தாலும் அந்த தாய் தன் மகன் என்றவுடன் தாய் துடிக்கிறா..கையைப்பிடித்து தன்னுடைய மற்ற பிள்ளைகள் பற்றியும் மகனுடைய  குடும்பம் பற்றியும் எப்படி ஆவலுடன் விராரிக்கும் தன்மை உள்ளத்தையே உருக்குகிறது ஆனாலும்   இந்த தாய்கு மகன் செய்ய வேண்டிய கடமையை செய்யவில்லை இருந்தாலும் நான்  இந்த வயோதிபரை  குற்றம் சாட்டவரவில்லை  நான் சொல்லவருவதெல்லாம்.. இன்று பிள்ளைகள் இருந்து முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தவர்களை பற்றியே..
நாங்கள் யாருமே நாம் வழிபடும் தெய்வங்களை நேரில் பார்ப்பதே இல்லை  நாங்கள் கண்ணால் பார்க்கும் ஒரே தெய்வங்கள் எங்கள் தாய் தந்தையர் தான் உலகத்தையும் உயிர் இனத்தையும் கடவுள் படைத்தான் என்கிறார்கள்  நான் அறியேன் ஆனால் உன்னை படைத்தது  உன்னுடைய பெற்றோர்தான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்..  இன்று தாயகத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன ஏன் ?முக்கிய   காரணம் கொடிய போர்தான் இருந்தாலும் பிள்ளைகள் இருந்தும்  முதியோர் இல்லம் செல்வோரே இப்பொழுது அதிகமாக காணப்படுகிறார்கள்..

பிள்ளைகளே தங்கள் கண் கண்ட தெய்வங்களை  முதியோர் இல்லத்துக்கு கூட்டிக்கொண்டுபோய் விடும்  கொடுமையும் நடக்கிறது.. இதற்கு ஆண் பிள்ளைகளே முக்கிய காரணம் அவர்கள் சொல்லும் காரணங்கள்  வீட்டில கஸ்ரம் என்னால் பாரமரிக்க முடியவில்லை.. இது எல்லாம் ஒருகாரணமா? உன்னோடு தாயை வைத்து பராமரிப்பது உனக்கு கஸ்ரம் என்றால்  உன்னையும் கஸ்ரப்பட்டுத்தானே அந்த தாய் 10மாதங்கள் சுமந்து  உன்னையும் உலகத்தில் ஒரு மனிதனா உருவாக்கிவிட்டாள் ஆனால் உன் பெற்றோருக்கு நீ கொடுத்த பரிசு முதியோர் இல்லமா?

இன்று வெளிநாடு வந்தவுடன் பெற்றோரை மறந்த பிள்ளைகளையும் திருமணம் ஆனவுடன் பெற்றோரை மறந்தவர்களையும் கண்முன்னே  பார்திருப்பீர்கள் குறிப்பாக   பெற்றோரை பார்க்கும் கடமை என்பது பெண்பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே உரிமை அதிகம்  இதனால் தான் மகன்களை பற்றியே அதிகம் குறிப்பிட விரும்புகின்றேன்.. புலத்துக்கு வந்தவர்கள் திருமணம் முடிந்தவுடன் பெற்றோரை கைவிட்டவர்கள் பற்றியே சொல்லவருகின்றேன்,,, ஏன் அப்பா அம்மாக்கு காசு அனுப்பவில்லை அல்லது அக்கறைப்ப்டுவதில்லை என்று கேட்டால் சொல்வார்கள் மனைவி  வீட்டில பிரச்சனை என்று அதுமட்டுமில்ல குடும்பம் பிள்ளை என்று வந்தாச்சு என்பார்கள்.

இவர்கள் சொல்வது உன்மையா? ஆணாக இருந்து கொண்டு தன்னுடைய பெற்றோருக்கு உதவி செய்யாமல் இவர்கள் சொல்லும் காரணம் மனைவி.. பிள்ளைகள்  ..தன் மனைவி மீது பழியைப்போட்டு தாங்கள் அக்கறை உள்ளது போல் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளும்  சுயநலவாதிகள். தாங்கள் இருக்கும் போது தங்களுடைய பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்பவர்களும் அவர்களை மறந்து அவர்களை கண்கலங்க செய்யும் பிள்ளைகள் ஒன்றை  மட்டும் உணர வேண்டும்  ...உங்களுடைய பெற்றோர்களுக்கு நீங்கள் செய்ததை பார்த்தே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள்  செய்வார்கள்  அப்போது நீங்கள் உணர்வீ ர்கள் உங்கள் தாய் தந்தையர் பட்ட வேதனையை.. அது காலம் கடந்த ஞானமாகவே  இருக்கும். அப்போது உங்கள் தெய்வங்கள் அருகில் இருக்காது..

இனி  மேலே குறிப்பிட்ட இந்த வயதான மகன் இன்று அவருடைய தாய் இருக்கும் முதியோர் இல்லத்துக்கே போய் இருக்கவேண்டிய நிலைமை அவர் தாயை கண்டது அளவற்ற இன்பமாக இருந்தாலும்  அவரும் உணர்ந்திப்பார் தன் தாயை அவர்கைவிட்டதையும் கடவுள் தாய் இருக்கும் இடத்திலே அவரை சேர்த்தையும்  நினைத்து பார்திருப்பார்.இந்த வயோதிபர் எப்போதோ எதோ ஒரு வகையில் புண்ணியம் செய்திருக்கிறார் அதனால் தான் தன் தாயை  இத்தனை வருடம் கடந்தும்  பார்த்திருக்கிறார்.

குடும்பம்  என்று வந்தவுடன் தாய்,தந்தையை தவிக்க விடுபவர் நல்லா யோசியுங்கள் இன்னும் அடுத்த முதியோர் தினத்து கிட்டத்தட்ட 1 வருடம்  இருக்கு..

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
(அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.)


முத்து விஜிதன்
20 வருங்களின் பின் தாயை கண்ட மகனும்,பிள்ளைகளால் முதியோர் இல்லங்களில் வாடும் பெற்றோர்களும் -முத்து விஜிதன் Reviewed by NEWMANNAR on October 15, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.