மன்னார் நீதவானை அச்சுறுத்திய விவகாரம்!- வழக்கு விசாரணை நவம்பர் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு
மன்னார் நீதவானை அமைச்சர் றிசாத் பதியூதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நேற்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மன்னார் மேலதிக நீதவானும், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டவருமான ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், அநுர மெத கொட, என்.எம்.சஹீட், கஸ்ஸாலி ஹூசைன், எஸ்.எல.எ.றசீத், எஸ்.ஏ.ஆர்.அகீலா, ஏ.எம்.லதீப்.எஸ்.எம்.எ.கபூர், எம்.பஹீஜ்.சிராஸ் நுார்தீன். அசித சிறிவர்தன.எம்.நிசார். ரிசான் அக்தார். பைசுல் ஹாதி, லியாகத் அலி. ஏ.எம்.பதுருதீன். ரியாஸ் காதர்.எம்.ஹிஜாஸ், எம்.றசித், எம்.மொஹிதீன். ஆகியோர் ஆஜராகினர்.
தமது தரப்பு வாதியின் நியாயங்களை முன்வைத்த சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், இந்த வழக்குக்கு தேவையான இரகசிய பொலிஸாரின் அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியூதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான போதுமான ஆதாரங்களை காணமுடியவில்லை என்பதால், தமது கட்சிக்காரான றிசாத் பதியூதீனின் கருத்துக்களையும் அவரால் முன் வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் சட்டத்தரணிகள் மன்றில் முன்வைத்தனர்.
அதே வேளை இரகசிய பொலிஸார் சார்பில் மன்றில் ஆஜரான ரொஸான் தமது விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும், தனது அறிக்கையினை மன்றில் தாம் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
அதனையடுத்து, நீதவான் ரங்க திசாநாயக்க மீண்டும் இந்த வழக்கை எதிர்வரும், நவம்பர் மாதம் 28 ஆம் திகதி புதன் கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார்.
மன்னார் நீதவானை அச்சுறுத்திய விவகாரம்!- வழக்கு விசாரணை நவம்பர் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 04, 2012
Rating:

No comments:
Post a Comment