வன்னியில் இரும்பு அகழும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்-இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூறி செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,,,
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தினைத் தொடர்ந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த மக்களின் பலர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதிகளில் உள்ள இரும்புகளை எடுத்து விற்பனை செய்கி;ன்றனர்.
மிகவும் வருமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கலே குறித்த இரும்புகளை எடுத்து விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக மாத்தளன்,பொக்கனை,வளைஞர் மடம்,முள்ளி வாய்க்கால் போன்ற பகுதிகளிலேயே அதிகலவில் மக்கள் இரும்பை எடுக்கின்றனர்.
இந்த நிலையில் இரும்பை எடுக்கும் மக்கள் மீது தற்போது தொடர்ச்சியாக அப்பகுதிகளில் உள்ள இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொள்ளுகின்றனர்.
இதனால் இந் மக்கள் பாதீக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
குறித்த இரும்புகளை அகழ்வதற்கு அரசாங்கம் தனியாருக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-எனவே குறித்த இரும்பு அகழ்வில் ஈடுபட்டு வரும் அப்பாவி பொது மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொள்ளும் தாக்குதல் சம்பவத்தை தான் வண்மையாகக் கண்ப்பதோடு குறித்த தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபடும் இராணுவத்தினருக்கு எதிராக உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுவாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னியில் இரும்பு அகழும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்-இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூறி செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.
Reviewed by NEWMANNAR
on
October 07, 2012
Rating:

No comments:
Post a Comment