மன்னாரில் கடும் மழை; பல வீதிகளில் வெள்ளம்; மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
மன்னாரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக தற்போது மன்னாரின் பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களின் பின் தற்போது மன்னாரில் கடும் மழை பெய்து வருகின்றது. மன்னாரில் உள்ள அனைத்து வீதிகளும் உயர்த்தப்பட்டு கொங்கிரீட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளது.
கழிவு நீர் வாய்க்கால் எவையும் புதிதாக அமைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மழை நீரை வீடுகளை விட்டு வெளியேற்றுவதில் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வீட்டு முற்றத்தை விட வீதிகள் உயரமான நிலையில் காணப்படுகின்றது. இதனால் மக்கள் தற்போது மழை நீரை வெளியேற்றுவதில் பல்வேறு சிக்கள்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது மன்னாரிலும் டெங்குக்காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால் மழை நீரினால் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-தற்போது மழை நீர் வீதிகளிலும் தேங்கி நிற்கின்றது.இதனால் போக்குவரத்துக்களும் சில வீதிகளிள் பாதீக்கப்பட்டுள்ளது.
எனினும் டெங்கு ஒழிப்பு வாரம் மன்னாரிலும் பிரகடனப்படுத்தி மன்னாரில் உள்ள வீடுகள்,அரச அரச சார்பற்ற நிறுவனங்கள்,பொது இடங்கள் ஆகியவற்றில் சிறமதானப்பனிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த சிரமதானப்பனிகளில் மன்னார் பொலிஸார்,மன்னார் நகர சபை,பிரதேச சபைகள்,தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் போன்றவை இணைந்து குறித்த சிரமதானப்பனிகள்,மற்றம் டெங்கு ஒழிப்பு செயல்திட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கடும் மழை; பல வீதிகளில் வெள்ளம்; மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
Reviewed by Admin
on
October 21, 2012
Rating:
No comments:
Post a Comment