சொந்தக் கிராமத்தில் அகதிகளாக வாழும் மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட கிராம மக்கள்
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் கடந்த பல வருடங்களாக சொந்தக் கிராமத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் கடற்கரையோரப்பகுதியில் காணப்பட்டமையால் இந்தப் பகுதியில் பொலிஸார் நிலைகொண்டனர்.இவர்களுக்குப் பாதுகாப்பாக கடற்படையினர் அப்பகுதியில் நிலைகொண்டுள்ளனர்.
பொலிஸார் தற்போது வெளியேறியுள்ள நிலையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து இதுவரை வெளியேறவில்லை.இதனால் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் அந்தக் கிராமத்திலேயே உறவினர்களுடைய வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தற்போது முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த வீட்டுத்திட்டத்தை மீண்டும் மக்களிடம் கையளிப்பதாக கடற்படையினர் பல தடவைகள் கூறி அந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இதனால் அந்த மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்த நிலையில் உள்ளனர்.
இதனால் அவர்களுடைய தொழில் வாய்ப்பு,மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் உள்ள மக்களின் 8 க்கு மேற்பட்ட வீடுகளைக் கடற்படையினர் முற்றாக உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளதாகவும்,குறித்த பகுதியைக் கடற்படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளன

Reviewed by NEWMANNAR
on
October 12, 2012
Rating:

No comments:
Post a Comment