மன்னாரில் காற்றுடன் கூடிய கடும் மழை- மீள்குடியேறியவர்கள் அவதி
மன்னார் பகுதியில் நீண்ட வரட்சியின் பின் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது. இவ்வருடம் ஆரம்பம் தொடக்கம் நாட்டின் வடபகுதிக்கு கிடைக்க வேண்டிய பருவ மழை கிடைக்காத நிலையில் கடும் வரட்சி நிலவிவந்தது.
இதன்காரணமாக ஆறுகள், நீர்நிலைகள், கிணறுகள் என்பன நீர் இன்றி பெரும் வரட்சியானதொரு காலநிலையே காணப்பட்டு வந்திருக்கின்றது.
இம்மாதம் ஆரம்பம் தொடக்கம் பகல் பொழுதில் கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில் தற்போதைய பருவ மழை நேற்று பிற்பகல் (16.10.2012) இடிமுழக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் தற்போது ஆரம்பித்திருக்கும் பருவ மழையினால் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இது சாதகமானதாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க வன்னிப்பிரதேசத்தின் பெருநிலப்பரப்பு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கும் பருவமழையின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பிருப்பதாக தெரியவருகின்றது. மக்கள் மீள்குடியேறிய கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் அதிகமானவர்களுக்கு இன்னமும் வீட்டுத்திட்டம் முறையாக வழங்கப்படாத நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பருவ மழையின் காரணமாக வீடுகள் இல்லாமல் கூடாரங்களுக்குள் வாழும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பலமாக பெய்ய ஆரம்பித்திருக்கும் பருவ மழை இன்னும் சிறிது நாட்களில் பாரிய மழை வீழ்ச்சியாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீள்குடியேறிய மக்கள் பாரிய சிக்கல்களுக்கு. முகம் கொடுக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களில் அநேகமானோர் இன்னமும் வழங்கப்பட்ட அரை நிரந்நதர வீடுகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் நிலையில் தற்போது தொடங்கியுள்ள பருவமழையினை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்களது இருப்பிடங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

Reviewed by NEWMANNAR
on
October 17, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment