மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு-மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கடும் மழையினைத்தொடர்ந்து மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்தின் நீரின் மட்டம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கட்டுக்கரை குளத்தில் இருந்து நீர் வினியோகிக்கப்படும் 162 குளங்களிலும் தற்போது போதிய அளவு நீர் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில் கடும் வரட்சி ஏற்பட்டிருந்தது.இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு மக்களும் தமது அன்றாட தேவைகளுக்hக நீரை பெற்றுக்கொள்ளுவதிலும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகியவை நிறைந்த நிலையில் காணப்படுகின்றது.
தற்போது மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்தில் 9.5 அடி தண்ணீர் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் விவசாயிகள் இம்முறை பெரும்போக நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் போது நீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை எனவும் இம்முறை நம்பிக்கையுடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான சூழ்நிலை அமைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 04, 2012
Rating:

No comments:
Post a Comment