புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளர் பரிதி பரிலிஸ் வைத்து சுட்டுக்கொலை!
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான பரிதி அல்லது றீகன் என அழைக்கப்படும் நடராசா மதிந்திரன் நேற்றிரவு 9மணியளவில் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உந்துருளியில் வந்த இருவர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளனர். பரிஸ் நகரில் உள்ள தமிழர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
49வயதுடைய இவர் மீது கடந்த ஆண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதேஅலுவலகத்திற்கு வெளியில் வைத்து சிலர் வாளால் வெட்டி படுகாயப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த பரிதி இந்தியாவில் இரண்டாவது பயிற்சி படையணியில் குமரப்பா, பானு, ரஞ்சன்லாலா, வாசு ஆகியோருடன் பயிற்சி பெற்றார்.
றீகன் என்ற இயக்க பெயருடன் களத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் மன்னார், யாழ்ப்பாணம், மற்றும் வன்னிப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார். 1990களின் மத்தியில் காயமடைந்து கால் ஒன்றை இழந்த நிலையில் பிரான்ஸிற்கு வந்த அவர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிகளில் ஈடுபட்டார்.
நேற்று அவர் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் பணிகளை முடித்து விட்டு இரவு 9மணியளவில் பேருந்து தரிப்பிடத்திற்கு வந்த போது அங்கு உந்துருளியில் தலைக்கவசம் அணிந்தவாறு வந்த இருவர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். துப்பாக்கி சூடு பட்டு கீழே விழுந்த இவரின் அருகில் வந்த அந்நபர்கள் மீண்டும் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளர் பரிதி பரிலிஸ் வைத்து சுட்டுக்கொலை!
Reviewed by NEWMANNAR
on
November 09, 2012
Rating:

No comments:
Post a Comment