வன்னிமாவட்டத்தில் 15ஆயிரம் மாணவர்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன் 737 மாணவர்களின் உடலில் குண்டுசிதறல்கள்
போர் நடவடிக்கையில் வன்னிமாவட்டத்தில் உள்ள மாணவர்களில் 15ஆயிரம் மாணவர்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன் 737 மாணவர்களின் உடலில் குண்டுசிதறல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனஅழுத்த்தில் இருந்து விடிவிக்க வடக்கில் தொடங்கப்பட்ட சமூகஉளவள நிலையத்தினை மூடுவதற்கு வடமாகாண ஆளுனர் எடுக்கும் முயற்சியினை தடுக்குமாறு தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் சிவகசக்திஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளமன்றத்தில் இந்த புள்ளிவிபரத்தினை வெளியிட்டுள்ளார்.
கல்விஅமைச்சுக்கான நிதிஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் வன்னியில் பெருமனவான மாணவர்கள் இன்று மரநிழலின் கீழ் இருந்து கல்விகற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
கல்விஅமைச்சுக்கான நிதிஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் வன்னியில் பெருமனவான மாணவர்கள் இன்று மரநிழலின் கீழ் இருந்து கல்விகற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
வன்னிபோரின் போது மக்களோ மாணவர்களே மனஅழுத்தத்திற்கு உள்ளகாவில்லை என பன்னாட்டிற்கு காட்டுவதற்காக வடக்கில் உள்ள உளவளமையத்தினை மூடுவதற்கு வடமாகாண ஆளுனர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வன்னியில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 15ஆயிரம் மாணவர்களில் நான்காயிரம் மாணவர்கள் போரின்போது காயமடைந்திருக்கின்றார்கள் இவர்களில் தற்போது 737பேர் போரின் வடுக்களான குண்டுசிதறல்களுடன் வாழ்ந்துவருகின்றார்கள்.
இவ்வாறான மாணவர்களின் சிகிச்சைக்காக அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை வடக்கில் உள்ள பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நீக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்னிமாவட்டத்தில் 15ஆயிரம் மாணவர்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன் 737 மாணவர்களின் உடலில் குண்டுசிதறல்கள்
Reviewed by NEWMANNAR
on
November 22, 2012
Rating:

No comments:
Post a Comment