மன்னார் மூன்றாம் பிட்டியில் சுழற்காற்று-11 தற்காலிக வீடுகள் சேதம்-(படங்கள் )
மீள் குடியேறிய குறித்த மூன்றாம் பிட்டி கிராம மக்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் கடுமையான சுழற்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன் போது அக்கிராமத்தில் உள்ள 11 தற்காலிக குடிசைகள் சேதமாகியதோடு பல குடிசைகளின் முகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பங்குத்தந்தை தெரிவித்தார்.
இதன் போது ஒருவர் காயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களுடைய வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
மன்னார் மூன்றாம் பிட்டியில் சுழற்காற்று-11 தற்காலிக வீடுகள் சேதம்-(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
December 08, 2012
Rating:
No comments:
Post a Comment