அண்மைய செய்திகள்

recent
-

நில அளவை ஊழியர் மன்னாரில் படுகொலை-இரண்டாம் பதிப்பு வீடியோ இணைப்பு -

மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது.


 மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த மன்னார் பிரதேச நிலஅளவை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு முன்பாக உள்ள தனியார் ஒருவருடைய வீட்டில் அந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் வாடகைக்கு அமர்ந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சக ஊழியர்கள் விடுமுறைக்காக தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர் .


 இந்த நிலையில் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32)என்ற இளைஞரும் மேலும் சில ஊழியர்களும் குறித்த வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அலுவலக பணி முடிந்த நிலையில் குறித்த ஊழியர் தனது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளார். பின் இன்று சனிக்கிழமை காலை அவர் அலுவலகம் செல்லவில்லை.

 இந்த நிலையில் மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரி ஒருவர் குறித்த இளைஞர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார்.ஆனால் அங்கு வேறு எவரும் இருக்கவில்லை. பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 -இந்த நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து தடையப்பொருட்களை அடையாளம் கண்டதோடு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தோடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மன்னார் உப்புக்குளம் பகுதியில் சம்பவம் இடம் பெற்ற வீட்டில் இருந்து குறித்த மோப்ப நாய் மூர்வீதி பகுதி வரை சுமார் 300 மீற்றர் வரை சென்றது. பின் வவுனியாவில் இருந்து விசேட பொலிஸார் வரவளைக்கப்பட்டு தடையங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.









 காலை 10.30 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் இறந்தவரின் தந்தை மற்றும்,உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
நில அளவை ஊழியர் மன்னாரில் படுகொலை-இரண்டாம் பதிப்பு வீடியோ இணைப்பு - Reviewed by NEWMANNAR on December 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.