அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசத்திற்கு கடல் மார்க்கமாக உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் நேற்று சனிக்கிழமை மன்னார் சவுத் பார் மற்றும் வங்காலை கடற் பிரதேசத்தின் ஊடாக 35 படகுகளில் எடுத்துச் செல்லப்பட்டன.


 கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை மற்றும் குளங்கள் உடைப்பெடுத்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹியான் தெரிவித்தார். இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான அத்தியவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

 முசலி பிரதேசத்திற்கான அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 25 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதே வேளை நிலத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள குஞ்சுக் குளம் மாதா கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை படகுகள் மூலம் கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரதேச சபை தலைவர் எஹியான் மேலும் கூறினார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்.ஞானராஜ் சோசைஇமன்னார் நகர சபை உறுப்பினர் நவுசீன்இஅமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன்இஉதவி பொலீஸ் அத்தியட்சகர் சுகதபால ஆகியோரும் இந்த நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் முசலி பிரதேச சபை தலைவர் எஹியான் கூறினார்.





முசலி பிரதேசத்திற்கு கடல் மார்க்கமாக உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு. Reviewed by NEWMANNAR on December 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.