அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரின் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக செல்வோர் திருப்பியனுப்பப்படக் கூடாது. அவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்று மன்னார் ஆயர், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தமையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.


வடக்கு கிழக்கில் இருந்து அகதிகளாக செல்வோர் மீண்டும் திருப்பியனுப்ப்படும் போது அவர்களுக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் ஆயரின் கருத்து, தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை கொள்வதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவோர் உண்மையான அகதிகள் அல்லர். அவர்கள் பொருளாதாரத்தை நோக்காக கொண்டு அங்கு செல்பவர்களாவர்.
நாடு இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் ஆயரின் இந்தக்கருத்து பொருத்தமற்றது என்று கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் ஆயரின் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் Reviewed by NEWMANNAR on December 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.