எத்தனை தடைகளையும் தாண்டி மக்களுக்கு பணிபுரிய நாம் தயார்-மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம்.
எமது மக்களுக்கு நாம் எவற்றைச் செய்தாலும் அவை போதாத நிலை தற்போது ஏற்பட்டுள்ள போதும் எமது மக்களுக்காகவும் அவர்களின் நலன் கருதியும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி பணிபுரிய மன்னார் நகர சபை எந்த நேரமும் தயாராக உள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்கான இறுதி சபைக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,,,
மக்கள் பிரதி நிதிகளாக நாங்கள் தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் எமது மக்களின் நலனுக்காக பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதை அனைவரும் அறிகின்றோம். ஆனால் நாங்கள் எமது மக்களுக்கு எவற்றைச் செய்தாலும் அவை போதாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 மாதங்கனாக எமது மக்களுக்கு செய்த பணியில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் வருடம் எம்மை மக்களின் பிரதி நிதியாக தெரிவு செய்த மக்களுக்hகாக சேவை செய்ய வேண்டும். -எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றையும் தாண்டி நாங்கள் சேவை செய்ய தயாராக உள்ளோம்.
மன்னார் சௌத்பார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மதுபானச்சாலைக்கு எதிராக கடந்த புதன் கிழமை மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் குறித்த மதுபானச்சாலை அமைக்க மன்னார் நகர சபையிடம் அவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை. மன்னார் நகர சபையும் அனுமதி வழங்கவும் இல்லை.
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த மதுபானச்சாலை மற்றும் ஏனைய மதுபானச்சாலை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளது. எமது மக்களின் விருப்பத்திற்கு மாறாக மன்னார் நகர சபை எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாது.இவ்விடயத்தில் கௌரவ உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
December 22, 2012
Rating:
No comments:
Post a Comment