மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் த.தே.கூ எம்.பிக்களுக்கும் அரச தரப்பு எம்.பிக்களுக்கும் இடையில் முரண்பாடு.(பட இணைப்பு)
பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருவதற்காகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வீராப்பு பேசுவதாக அரச தரப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான குனைஸ் பாரூக் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஸாட் பதீயுதீன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாரூக்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது முதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டார்.
இந்திய வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள்,காணி அபகரிப்பு,மீள் குடியேற்றம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் கேட்கப்பட்ட போது அதற்கு பொறுப்பாண அதிகாரிகள் உரிய பதிலை வழங்காததோடு,அமைச்சரும்,அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உரிய பதிலை வழங்க அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள் உற்பட பல பிரச்சினைகளை முன்வைத்தார்.
அதற்கும் உரிய பதில் வழங்கவில்லை.
இந்த நிலையில் அவ்விடத்தில் கதைத்த அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாரூக் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்து நீங்கள் அனைவரும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருவதற்காகவே வீரப்பு பேசுவதாகவும் நீங்கள் அனைவரும் இனவாதம்,மதவாதம் பேசுவதாகவும் தெரிவித்தார்.
இவருடைய கருத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உரிய பதிலடி கொடுத்தார்.
மக்களுடன் மக்களாக இருந்து பாடுபடுகின்ற நாங்கள் இதனைப்பற்றி பேசாது சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற நீங்களா பேசுவீர்கள் என கேட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதோடு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான குனைஸ் பாரூக் மேடையில் இருந்து தரக்குறைவான வார்த்தைப்பிரையோகத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களினால் குறித்த கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் த.தே.கூ எம்.பிக்களுக்கும் அரச தரப்பு எம்.பிக்களுக்கும் இடையில் முரண்பாடு.(பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
December 17, 2012
Rating:
No comments:
Post a Comment