அண்மைய செய்திகள்

recent
-

பயணிகள் பஸ்தரிப்பிடம் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் முசலி மக்கள்

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால் மன்னாரிலிருந்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதிலும் முசலியில் அதிக பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் தங்கள் சொத்துக்களையும், உறவுகளையும் இழந்து விட்டு சென்றார்கள். 2009 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நிரந்த சமாதானத்தின் பின்பு பலவந்த வெளியேற்றப்ட்ட அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்பட்டனர்.


 அதனைத்தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உள்ளூராட்ச்சி தேர்தல் நடந்த பிரதேச சபை நிர்வாக சபை மற்றும் பிரதேச செயலகம் என்பனவற்றின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்கிக்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதியினால் சீரான முறையில் போக்குவரத்து இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.

 நாளாந்தம் மன்னாரிலிருந்து பயணிக்கின்ற பஸ்கள் பெற்கேணி, வேப்பங்குளம் மற்றும் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.

 பின்பு கொழும்பு, புத்தளம், ஆகிய இடங்களுக்கு செல்கின்ற பஸ்கள் சிலாவத்துறையினூடாக செல்கின்றன. பயணிகள் பஸ்தரிப்பிடம் இல்லாமல் கடந்த 03 வருடகாலமாக மழையிலும் வெயிலிலும் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருப்பதற்று இடம் இல்லாமல் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக முசலி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 எனவே பயணிகள் நலன்கருதி பஸ் தரிப்பிடத்தனை செய்து தருமாறு முசலி பிரதேச சபையிடமும் இது சம்பந்தமான அதிகாரிகளிடமும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 எஸ். எச். எம். வாஜித்
பயணிகள் பஸ்தரிப்பிடம் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் முசலி மக்கள் Reviewed by NEWMANNAR on December 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.