மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை என்பதில் உண்மையில்லை: அமைச்சர் றிசாத்
இது தொடர்பில் அந்த அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் மன்னார் அபிவிருத்தி குழு கூட்டம் முடிவுற்றது என்று ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.
இக் கூட்டத்தில், கல்வி .உட்கட்டமைப்பு, நீர்பாசனம், மீன்பிடி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உரிய அதிகாரிகளினால் சபைக்கு சமர்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் அமைச்சர் றிசாத் பதியுதீனால் வழங்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்தக்களை முன்வைத்த போது. இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் எற்பட்டது. இருப்பினும் இந்த கருத்து பறிமாற்றத்தால் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கோ அல்லது அன்றைய அபிவிருத்தி குழு கூட்டத்திற்கோ எவ்வித தடங்கள்களும் ஏற்படவில்லை.
இருந்த போதும்,சில சக்திகள் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்ததாகவும், தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச செயலாளர்கள் தெரிவித்தாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது .
மாவட்ட மக்களின் அனைத்து அபிவிருத்தி பணிகளுக்கும் எவ்வித இனபாகுபாடுகள் இன்றி அனுமதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை என்பதில் உண்மையில்லை: அமைச்சர் றிசாத்
Reviewed by NEWMANNAR
on
December 20, 2012
Rating:
No comments:
Post a Comment