மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 620 குடும்பங்கள் இடப்பெயர்வு.{படங்கள்}
மல்வத்து ஓயா பெருக்கடுத்துள்ளதன் காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 620 குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் தற்போது வெள்ள நீரில் மூழ்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள 336 குடும்பங்களையும் உடனடியாக குறித்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் வழங்கியிருந்தது.
எனினும் 150குடும்பங்கள் மாத்திரமே இடம் பெயர்ந்த நிலையில் தற்போது அந்த மக்கள் மடு சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை மடுக்கரை மற்றும் நானாட்டான் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் ம.வி பாடசாலையில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1427 பேரும்,மோட்டக்கடை ம.வி பாடசாலையில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 645 பேரும்,மோட்டக்கடை பொது மண்டபத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேரும்,மடு சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 645 பேரும் இவ்வாறு தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 620 குடும்பங்களைச் சேர்ந்த 2304 பேர் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்களும்,பிரதேச சபை தலைவர்,உப தலைவர் உறுப்பினர்களும் இணைந்து வேலைத்திடடங்களையும்,பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மக்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாஙக அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதே வேளை குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான இராணுவத்தினர் மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 620 குடும்பங்கள் இடப்பெயர்வு.{படங்கள்}
Reviewed by NEWMANNAR
on
December 23, 2012
Rating:
No comments:
Post a Comment