அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டோர் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்: மன்னார் ஆயர்

அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கோரி சென்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.


 தமது நாட்டுக்கு அகதிகளாக வருவோரை திருப்பியனுப்ப வேண்டாம் என்று ஆயர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 இந்தநிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளார்கள் என்று ஆயர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆயரிடம் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதியன்று இலங்கையின் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.

 அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருந்த போதும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காதபடியால் தாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டோர் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்: மன்னார் ஆயர் Reviewed by NEWMANNAR on December 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.