அண்மைய செய்திகள்

recent
-

சன்னார்,ஈச்சலவக்கை கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் எவையும் வழஙகப்படவில்லை என விசனம்.


கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட 26 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகளும் மேற்கொள்ளபபட்டு வருவதாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார் தெரிவித்தார்.


மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் மற்றும் ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இது வரை எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களைச் சேர்ந்த 684 பேரூம்,ஈச்சலவக்கை கிராமத்தில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 668 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களுக்கு செல்லாமல்; தமது கிராமங்களில் உள்ள உயர்ந்த பகுதிகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் தங்கியுள்ளனர்.

எனினும் தமக்கு இதுவரை எவ்வித நிவாரணங்களும் அரச தரப்பினால் வழங்கப்படவில்லை எனவும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தம்மை வந்து பார்க்கவில்லை எனவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.கடந்த 3 தினங்களுக்கு மேலாக எவ்வித உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில் காணப்படுவதாகவும்,அப்பகுதியில் உள்ள இராணுவத்தினரே தமக்கு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடையம் தொடர்பில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார் அவர்களுடன் தொடர்பு கோண்டு கேட்ட போது அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

குறித்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்   பிரிவில் அமைக்கப்பட்ட 26 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான சகல உதவிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சன்னார்,ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் இடைத்தங்கள் முகாம்களில் உள்ளனர்.அவர்களுக்கான  உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இடம் பெயர்ந்து செல்லாத நிலையில் குறித்த கிராமங்களிலேயே தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கான  எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லை என மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார் தெரிவித்தார்.

சன்னார்,ஈச்சலவக்கை கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் எவையும் வழஙகப்படவில்லை என விசனம். Reviewed by Admin on December 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.