கடத்தப்பட்ட மாணவி மீட்பு: 4 பேர் சந்தேகத்தில் கைது-2ம் இணைப்பு
மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு அன்றைய தினமே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலைக்கு முன்பாக வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தை கண்ட சக மாணவிகள் பாடசாலை நிர்வாகத்திற்கும் குறித்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல்களை கொடுத்தனர். விரைந்து செயல்பட்ட பெற்றோரும், பாடசாலை நிர்வாகத்தினரும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டனர்.
இந்நிலையில் அந்த மாணவியை மன்னார் பொலிஸார் மடு சந்தியில் வைத்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மீட்டுள்ளதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
15 வயதான மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பரீட்சை முடிவடைந்து வீட்டுக்கு செல்வதற்காக மதியம் 1.15 மணியளவில பாடசாலையை வளாகத்தை விட்டு வெளியில் வந்துள்ளார்.
இதன்போது புத்தம் புதிய சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்த 4 சந்தேக நபர்கள் குறித்த மாணவியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர். ஆனால் முச்சக்கர வண்டியில் எவ்வித இலக்க தகடுகளும் காணப்படவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி முதலில் மன்னார் எழுத்தூர் பகுதியை நோக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து பாடசாலை சீருடையை பலவந்தமாக மாற்றுவதற்காக மாணவி சௌத்பார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் பேரூந்து ஒன்றின் மூலம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்ட மாணவி பின்னர் மடு வீதியில் வைத்து பலவந்தமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது அப்பகுதியில் வீதியில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர். அத்துடன் தலைமுடிக்கு கட்டியிருந்த ‘ரிபன்’ பாடசாலையின் ரிபன் என்பதை கண்டுகொண்ட பொலிஸார் இவர் கடத்தப்பட்ட மாணவி என அறிந்து கொண்டனர்.
இந்த நிலையில் பொலிஸார் உடன் குறித்த மாணவியை மீட்டதோடு குறித்த இளைஞரை கைதுசெய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து மாணவியை கடத்துவதற்காக பயண்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி உற்பட மூன்று பேரை கைதுசெய்தனர்.
இந்த நிலையில் குறித்த மாணவியிடமும் குறித்த இளைஞர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் மூலம் ஒரு தலைக்காதலினால் ஏற்பட்ட கடத்தல் சம்பவம் என தெரிய வந்துள்ளது.
மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 3 மாதங்களாக குறித்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்றும் குறித்த மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததை அடுத்தே மாணவியை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி உடற்பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார்
பொலிஸார் மேற்கொண்டு
பொலிஸார் மேற்கொண்டு
கடத்தப்பட்ட மாணவி மீட்பு: 4 பேர் சந்தேகத்தில் கைது-2ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 01, 2012
Rating:

No comments:
Post a Comment