வன்னி மாவட்ட பாடசாலைகள் அபிவிருத்தி தெரிவில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு.
பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் வன்னி மாவட்டத்தில் 3 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பாடசாலைகளில் தமிழ் பாடசாலைகள் அதிகலவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநான் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இன்று கடிதம் ஒன்றையும் அணுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,
பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் வன்னி மாவட்டத்தில் 3 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார்,வவுனியா மேற்கு,முல்லைத்தீவு ஆகிய 3 கல்வி வலையங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது அபிவிருத்திக்காக 42 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் 2 பாடசாலைகள் மாத்திரமே தமிழ் பாடசாலைகளாக காணப்படுகின்றது.
ஏனைய 40 பாடசாலைகளும்,முஸ்ஸிம் மற்றும் சிங்கள பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
துற்போது இந்த வேலைத்திட்டத்திற்காண ஒப்பந்த தெரிவுகளும் கோறப்பட்டுள்ளது.
இந்த தெரிவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.எனவே இவ்விடையம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்து வன்னி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாடசாலைகள் அபிவிருத்தி தெரிவில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 01, 2012
Rating:

No comments:
Post a Comment