கண்ணீர் சிந்தியும் பயன் இல்லை -மாணவர்களின் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை.(படங்கள்)
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்துள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமது பிள்ளைகள் மீது தொடர்ச்சியாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதனை விடுத்து அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் யாழ் இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் தலைமையில் பீடாதிபதிகளும் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை பலாலி படைத்தளத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன் போது மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி அங்கிருந்தவர்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிபந்தனை விதிப்பதைத் தவிர்த்து படிப்பைத் தொடருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க கூறியிருக்கின்றார்.
இவர்களில் இத்தகைய நிலையில் விரைவான மாற்றத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்படுவார்களென கடும் தொனியில் அவர்களது பெற்றோரை மீரட்டியுள்ளார்.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தமது நிலைப்பாட்டை இராணுவ தளபதியிடம் தெரிவித்தனர்.
அதாவது கல்வியை ஒரே நோக்கமாகக் கொண்டு வந்த மாணவர்களது கல்வியை குழப்ப வேண்டாம்.
அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.
அவர்களை விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தும் எதுவிதபதில்களும் தெரிவிக்கமால், நிபந்தனைகள் விதிப்பதைக் கைவிட்டு மீண்டுமொரு முறை பல்கலைக்கழகத்தை இயங்க வைக்குமாறு கூறியுள்ளார்.
கண்ணீர் சிந்தியும் பயன் இல்லை -மாணவர்களின் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை.(படங்கள்)
Reviewed by Admin
on
December 22, 2012
Rating:

No comments:
Post a Comment