சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலையம் திறந்து வைப்பு
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலையம் இன்று செவ்வாய்க்கிழமை அரச உடமைகள் மற்றும் வர்த்தக முயற்சி அமைச்சர் தயா சிறித்த திசேரா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கீதஞ்சலி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து அமைச்சர் தயா சிறித்த திசேரா ,சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கீதஞ்சலி உற்பட அதிதிகள் மாலை அணிவித்து மன்னார் நகர மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பொது கூட்டம் ஒன்று இடம் பெற்றது.இதன் போது மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் இந்து,பௌத்த,இஸ்ஸாம் மதகுருக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாலர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட பிரதான நிர்வாக குழு உறுப்பினர்களுக்காண அங்கத்துவத்தை அமைச்சர் வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவர்கலாக தெரிவு செய்யப்பட்ட 1650 அங்கத்துவர்களுக்காண அங்கத்துவ அடையாள அட்டைகள் ஒவ்வெரு கிராம அங்கத்துவர்களிடமும் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் பெற்றாh பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எஸ்.யுகேந்திரன்,சூசைதாசன் குலாஸ்,எஸ்.செல்வக்குமாரன்(டிலா ன்),எஸ்.சேமாலை பீரீஸ்,ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலையம் திறந்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 11, 2012
Rating:
No comments:
Post a Comment