தொடர்ச்சியாக பெய்த மழையினால் நிவாரணம் இன்றி தவிக்கும் முசலி பிரதேச மக்கள் -பட இணைப்பு.,
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 03 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பூனைச்சிக்குளம், பண்டாரவெளி மற்றும் மேத்தன்வெளி போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் அதிகமான பாதிப்புக்களை எதிர்கொண்டனர். குறிப்பாக மணற்குளம், பண்டாரவெளி, இ
லந்தைக்குளம், மேத்தன்வெளி மற்றும் வெளிமல போன்ற மீள்குடியேற்ற கிராமங்கள் நீரில் மூழ்கின.
அத்துடன் விவசாயம் செய்கை பண்ணப்பட்ட 80 ஏக்கருக்கு அதிகமான விவசாய நெற் பயிர் செய்கையும் நீரில் முற்றாக சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த மழையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் விலங்கினங்கள் பல்வேறுபட்ட சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
எஸ் எச். எம். வாஜித்
மணற்குளம்,
சிலாவத்துறை,
மன்னார்
11.12.2012
தொடர்ச்சியாக பெய்த மழையினால் நிவாரணம் இன்றி தவிக்கும் முசலி பிரதேச மக்கள் -பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
December 11, 2012
Rating:

No comments:
Post a Comment