மன்னார் உட்பட 19 இடங்களில் நன்னீர் மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைகள்
வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்காக மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகளை முதன்முதலில் அமைப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளதுடன் அதற்காக 28 மில்லியன் ரூபாவினையும் வழங்கியுள்ளதாக வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி காணி நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் கால்டீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த நன்னீர் மீன்பிடி இந்த ஆண்டில் மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வடக்கில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்கு மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் முதன்முறையாக அமைப்பதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி அதற்கென வவுனியா மாவட்டத்தில் வவுனியா குளம், முல்லைத்தீவில் முத்தையன்கட்டு குளம், கிளிநொச்சி அக்கராயன் குளம் ஆகியன உற்பத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசினால் 28 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த குளங்களுக்கு அண்மையில் வருடம் முழுவதும் நீர் தேங்கி நிற்ககூடிய சிறிய குளங்களை அமைத்து அதன் அளவினைப் பொறுத்து முட்டைகள் போடப்பட்டு மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும். எனினும் இதில் சேதங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இதில் வளரும் மீன்குஞ்சுகளில் இருந்து பயனைப்பெற்றுக் கொள்வதற்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய 19 நன்னீர் மீன் வளர்ப்புக்கான இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரை காலமும் அம்பாறை மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் இருந்தே மீன்குஞ்சுகள் வாங்கப்பட்டன. ஆனால் எதிர்வரும் காலங்களில் நாமே உற்பத்தி செய்வதனால் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
January 19, 2013
Rating:

No comments:
Post a Comment