மன்னாரில் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைப்பு.
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கடந்த செவ்வாய் கிழமை கொலை மிரட்டல் கிடைக்கப்பெற்ற நிலையில் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு வியாழக்கிழமை (17-01-2013) குறித்த சியாத் இயக்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களான எஸ்.ஆர்.லெம்பேட்,ஏ.ரி.மார்க்,என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சைக் ஆகிய மூன்று ஊடகவியலாளர்களுக்கும் சியாத் இயக்கம் இன்ற பெயரில் அனுப்பிவைக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் தபால் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மிரட்டல் கடிதம் தொடர்பில் குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் கடந்த வருடம் இடம் பெற்ற போது சம்பவ இடத்தில் நின்று செய்தி சேகரித்த மேலும் ஒரு பத்திரிக்கை ஊடகவியலாளரான ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கு ஏனையோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் போன்று அவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் கடந்த வியாழக்கிழமை அவருடைய வீட்டில் கிடைத்துள்ளது.எனினும் குறித்த ஊடகவியலாளர் மன்னாரில் இல்லாததன் காரணத்தினால் குறித்த கடிதம் கொலை மிரடடல் கடிதம் என நேற்று வெள்ளிக்கிழமை மாலை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மன்னாருக்கு வந்தவுடன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி தெரிவித்தார்.
குறித்த சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான எஸ்.ஆர்.லெம்பேட்,ஏ.ரி.மார்க்,என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சைக்,மற்றும் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகிய நான்கு பேரும் கடந்த வருடம் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவ்விடத்தில் நின்று செய்தி சேகரித்த நிலையில் குறித்த 4 ஊடகவியலாளர்களுக்கும் இனம் தெரியாத குழு ஒன்றினால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
January 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment