றிஸானா நபீக்கின் ஈடேற்றத்திற்கு இலங்கை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பிரார்த்திப்போம்- மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன்.
சவூதி அரேபியாவில் சிரைச்சேதம் செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண் றிஸானா நபீக்கின் ஈடேற்றத்திற்கு இலங்கை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பிரார்த்திக்க வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
சவூதி ஆரேபியாவில் வீட்டுப்பணிப்பெண்ணாக கடமையாற்றிய றிஸானா நபீக்கின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சவூதி அரசாங்கத்தின் சட்டத்தின் படி கொலைக்கு கொலை தான் சட்டமாக இருந்தாலும் இஸ்லாம் மன்னிப்பையும் மிகவும் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல விடயங்களை மன்னித்துள்ளார். -குறித்த கொலையினை றிஸானா நபீக் செய்யவில்லை. குழந்தை மூச்சுத்திணறித்தான் இறந்திருக்கின்றார்.இந்த சம்பவத்தை மன்னித்து றிஸானா நபீக்கை மன்னித்திருக்கலாம். இறுதி வரை விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்த றிஸானா நபீக்கின் குடும்பத்தினர் மற்றும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் பதில் கிடைத்துள்ளது.
றிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதினால் அவரின் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். அன்னாரது ஈடேற்றத்திற்கு அனைவரும் பிராத்தனைகளை மேற்கொள்வோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
சவூதி ஆரேபியாவில் வீட்டுப்பணிப்பெண்ணாக கடமையாற்றிய றிஸானா நபீக்கின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சவூதி அரசாங்கத்தின் சட்டத்தின் படி கொலைக்கு கொலை தான் சட்டமாக இருந்தாலும் இஸ்லாம் மன்னிப்பையும் மிகவும் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல விடயங்களை மன்னித்துள்ளார். -குறித்த கொலையினை றிஸானா நபீக் செய்யவில்லை. குழந்தை மூச்சுத்திணறித்தான் இறந்திருக்கின்றார்.இந்த சம்பவத்தை மன்னித்து றிஸானா நபீக்கை மன்னித்திருக்கலாம். இறுதி வரை விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்த றிஸானா நபீக்கின் குடும்பத்தினர் மற்றும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் பதில் கிடைத்துள்ளது.
றிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதினால் அவரின் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். அன்னாரது ஈடேற்றத்திற்கு அனைவரும் பிராத்தனைகளை மேற்கொள்வோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
றிஸானா நபீக்கின் ஈடேற்றத்திற்கு இலங்கை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பிரார்த்திப்போம்- மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன்.
Reviewed by NEWMANNAR
on
January 11, 2013
Rating:
No comments:
Post a Comment