சொத்துக்களை இழந்து தவிக்கும் மன்னார் - முசலி மக்களின் விடிவு எப்போது?

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஸ்ரப்படுகின்றனர். இந்த நிலையில் யுத்தத்தினால் அழிந்த தமது வீடுகளையும் நிலங்களையும்
ஏனைய சொத்துக்களையும் எப்படி மீள்நிர்மாணம் செய்து கொள்வது எனக்கலங்கி நிற்கின்ற வேளையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் 50000 வீடுகளை நிர்மாணித்து வழங்க முன்வந்தது.
ஏனைய சொத்துக்களையும் எப்படி மீள்நிர்மாணம் செய்து கொள்வது எனக்கலங்கி நிற்கின்ற வேளையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் 50000 வீடுகளை நிர்மாணித்து வழங்க முன்வந்தது.
இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 380 வீடுகளை நிர்மாணிக்கும் முகமாக பயனாளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 05 பிரதேச செயலாளர் பிரிவிலும் யுத்தத்தினால் பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்ட பிரதேசமாக மன்னார் - முசலி பிரதேசம் உள்ளது.
இந்த யுத்தத்தினால் 23 வருட காலமாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. அதிலும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பழைய புதிய அகதிகள் என இனங்காணப்படுகின்றனர். இது வரைக்கும் இந்திய அரசாங்கத்தினால் முசலி பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட வீடுகள் 105 ஆக உள்ளது.
இன்றும் முசலி பிரதேச மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இல்லாமலும் மர நிழல்களிலும் ஓலை கொட்டில்களிலும் வாழ்கின்றனர்.
யுத்தத்தினால் இழந்த சொத்துக்களை எப்படி பெற்று கொள்வது என்று தெரியாமல் ஏங்கி தவிக்கும் மன்னார்-முசலி மக்களுக்கு விடிவு எப்போது?
சொத்துக்களை இழந்து தவிக்கும் மன்னார் - முசலி மக்களின் விடிவு எப்போது?
Reviewed by NEWMANNAR
on
January 02, 2013
Rating:

No comments:
Post a Comment